141. மிளகரணை
Botanical Name                      : TODDALIA ASIATICA
Constituents                            : barberine
Uses                                        : Stomach aches, asthma, fever, join pain
1. மூலிகையின் பெயர்     : மிளகரணை
2. வேறுபெயர்கள்          : -.
3. தாவரப்பெயர்           : TODDALIA ASIATICA
4. தாவரக்குடும்பப் பெயர்  : RUTACEAE
5. வகைகள்              : இல்லை.
6. பயன்தரும் பாகங்கள்   : இலை,காய்,பழம் , வேர் மற்றும்  பட்டை.
சளி,இருமல்,வயிற்று வலி,மலேரியா நோய்,அஜீரண வாயு,பித்த சூளை,காசம் ஆகியன தீரும்.


சமூலம் நிழலில்  காய வைத்து சுமாராக இடித்து 10 கிராம் அளவு எடுத்து 500 மி.ல்லி. நீரில் கொதிக்க வைத்து 50 மில்லியாகச் சுண்டிய பின் வடிகட்டி உணவுக்கு முன் காலை, மாலை குடிக்க வேண்டும்.

சுரம் தணிய மிளகரணையின் இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஆவி பிடிக்க வேண்டும் அப்போது வியர்வை கொட்டினால் குணமாகும்.

பிடிப்பு வீக்கம், வலி குணமாக இதன் காய், வேர்ப் பட்டை வகைக்கு கைப்பிடி அளவு எடுத்து அரை லிட்டர் நல்லெண்ணையில் மிதமாக தீயில் பக்குவமாகக் காய்ச்சி வடிகட்டி தலை உடம்பு முழுக்கத் தேய்க்க வேண்டும்.

மிளகரணையின் பச்சை இலையை மென்று தின்ன வயிற்று வலி குணமாகும்.

காச்சல் குணமாக இதன் இலையை ஒரு பிடி எடுத்து 500 மில்லி நீரில் 200 மில்லி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டிக் குடிக்க வேண்டும்.

மிளகரணை வேரை கைப்பிடி எடுத்து 200 மில்லி விளக்கெண்ணையுடன் கலந்து பதமாகக் காய்ச்சி வடிகட்டி வீக்கத்திற்குத் தடவ விரைவில் குணமாகும்.

வேர் பட்டை 20 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் இட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி நாள்தோரும் இரண்டு வேளை குடிக்கத் தேக பலம், பசி, தீவனம் உண்டாகும். கபம், குளிர் சுரம் போகும்

No comments:

Post a Comment