Simarouba glauca
சொர்கமரம்
தாவரவியல் பெயர் Simarouba glauca
இதில் உள்ள வேதிப்பொருள் கேன்சர் குணப்படுத்தும் தன்மை உடையது 
இதன் கசப்பு தன்மை  வேம்புக்கு இனையான பண்புகளை கொண்டது

சங்குப்பூ.
1) மூலிகையின் பெயர் - சங்குப்பூ.

2) தாவரப்பெயர் -: CLITORIA TERNATEA.

3) தாவரக் குடும்பம் -: FABACEAE, (PAPINONACEAE)

4) வகைகள் -: நீல , வெள்ளைப் பூ

5) வேறு பெயர்கள் -: காக்கணம் செடி, மாமூலி, காக்கட்டான் என்றும் உண்டு.

6) பயன்தரும் பாகங்கள் -: இலை, வேர் மற்றும் விதை முதலியன.

7) வளரியல்பு -: சங்குப் பூ கொடி எல்லா இடங்களிலும்வேலியோரங்களில் வளரக்கூடியது. இது கொடி வகையைச் சேர்ந்தது. இதன் பூக்கள் நீல நிறத்திலும் வெண்மை நிறத்திலும் காணப்படும். இது கூட்டிலைகளையுடைய ஏறு கொடி. சங்குப்பூ கொடியாக வளரும்.இயலுபுடையது. அழகுக்காக வீடுகளிலும்வளர்க்கப் படுகின்றது. தட்டையான காய்களையுடையது. பொதுவாக மருத்துவத்திற்கு வெண்ணிறப் பூவை உடைய வெண் காக்கட்டானே பயன்படுத்தப் படுகின்றது. இது சிறந்த மருத்துவப் பயன் உடையது. இதன் பூக்கள் பார்ப்பதற்கு சங்கு போல் இருப்பதால் சங்குப் பூ என்ப் பெயர் வந்தது. காக்கண விதைகள் நறு மணம் உடையதாகவும் புளிப்புச் சுவை கொண்டதாகவும் இருக்கும். இதன் குணம் சிறுநீர் பெருக்குதல், குடற் பூச்சிக் கொல்லுதல், தாது வெப்பு அகற்றுதல், பேதி, வாந்தி, தும்மல், உண்டாக்குதல்.

8) மருத்துவப் பயன்கள் -: நெறிக்கட்டிகள் வீங்கி இருக்கும் போதுசங்குப்பூவின் இலைச்சாறு ஒரு தேக்கரண்டி, இஞ்சிச்சாறு ஒரு தேக்கரண்டி எடுத்துக் கலந்து அருந்து வர வியர்வை நீங்கும்.

சங்கு பூவின் இலைச்சாற்றைக் கொண்டு புடமிடதங்கம் பஸ்பமாகும்.

சங்குப்பூவின் இலைகளை சட்டியல் இட்டு இளவறுப்பாக வறுத்து நன்கு சூரணம் செயது கொண்டு இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறு மி.கி. வீதம் அருந்தி வர, மலக்கட்டு நீங்கி நன்றாக கழிச்சல் ஏற்படும்.

காக்கரட்டான் பச்சை வேர் 40 கிராம் சிதைத்து அரை லிட்டர் நீரில் போட்டு 200 மி.லி. யாகக்காயச்சி 1 முடக்கு வீதம் 2 மணிக்கு 1 தடவை 6 முறை சாப்பிடச் சுரம், தலைவலி ஆகியவை தீரும்.

வேரைப் பாலில் அவித்து, பாலில் அரைத்து சுண்டையளவு காலை மாலை பாலில் சாப்பிட மேகவெள்ளை, பிரமேகம், தந்தி மேகம், சிறுநீர் பாதை அழற்சி, நீர் எரிச்சல் ஆகியவை தீரும்.

வெள்ளைக் காக்கரட்டான் வேர், கட்டுக் கொடி இலை, கீழாநெல்லிச் சமூலம், பெருநெருஞ்சில் இலை, அறுகம்புல் வகைக்கு 1பிடியுடன் 5,6 மிளகு சேர்த்து மை போல் அரைத்து நெல்லிக்காயளவு தயிரில் கொள்ள எவ்வளவு நாள்பட்ட வெள்ளை ஒழுக்காயினும் தீரும்.

கருங்காக்கரட்டான் வேரை பாலாவியில் வேக வைத்து உலர்த்தி பாதியளவு சுக்குடன் பொடித்து காலை மாலை 2 சிட்டிகை வெந்நீருடன் கொள்ள வாத நோய், வாயுவலி, சீதளம் நீங்கும்.

 இச்சூரணத்தில் 5 அரிசி எடை குழந்தைகளுக்குக் கொடுக்க மந்தம், மலச்சிக்கல் நீங்கும்.

நெய்யில் வறுத்து இடித்த விதைச் சூரணம் 5 முதல் 10 அரிசி எடை வெந்நீருடன் கொடுக்க குழைந்தைகளுக்கான இழப்பு, மூர்ச்சை, நரம்பு இழுப்பு ஆகியவை தீரும்.

விதைத்தூள் 50 கிராம், இந்துப்பு 50 கிராம், சுக்குத்தூள் 25 கிராம் கலந்து தினம் 1 வேளை 3 கிராம் சாப்பிட்டு வர மலப்போக்கு பெருகி, யானைக்கால் வீக்கம் மெல்லக்குறையும். மேலும் இலையை விளக்கெண்ணெயில் வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.

நாள் பட்ட கப நோய்களுக்கு காகட்டான் பட்டையை நன்கு இடித்து, சாறு பிழிந்து இருப்பத்தி நான்கு கிராம் அளவு எடுத்து குளிர்ச்சியான பாலுடன் அருந்தி வர எளிதில் குணம் தரும்.

காக்கட்டான் வேர்ப் பட்டையை ஊற வைத்த ஊறல் குடி நீரை முப்பது மி.லி. முதல் அறுபது மி.லி. வீதம் அருந்தி வர, சிருநீர்ப்பை நோய்களும் சிறுநீர்ப் பாதை எரிச்சல், வலி முதலிய நோய்களும் குணமாகும்.

சங்குப்பூ செடியின் வேர் ஒரு இயற்கை பூச்சிக்கொல்லியாக விளங்குகிறது. இதன் வேரை தூளாக்கி, ஒரு கிராம் முதல் மூன்று கிராம் வரையில் குழந்தைகளுக்கு கொடுத்தால் வயிற்றில் இருக்கும் பூச்சிகள் அத்தனையும் அழிந்து விடும்.

இந்த சாற்றை பருகினால் வயிற்றில் இருக்கும் பூச்சிகளை அழிக்கலாம். அதுமட்டுமின்றி, மூளைக்கு இது இதமளிக்க கூடியது. ஒற்றை தலைவலிக்கும் இது மருந்தாக பயன்படுகிறது. மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை ஒரு மண்டலம் அல்லது இரண்டு மண்டலம் கொடுக்கலாம்.





விராலி

*விராலி*
1. மூலிகையின் பெயர் :- விராலி.

2. தாவரப்பெயர் :- HYMENODICTYON EXCLSUM.

3. தாவரக்குடும்பம் :- RUBIACEAE.

4. பயன்தரும் பாகங்கள்- இலை மற்றும் பட்டை.

5. வளரியல்பு :- விராலி தமிழகமெங்கும் புதர் காடுகளில்வளர்கிறது. இது வளர்ச்சியைத் தாங்கி வளரக்கூடியது. இதை விவசாயிகள் விராலிமாறு என்று
சொல்வர். இது காம்புள்ள சாறற்ற மேல் நோக்கிய இலைகளையும் சிறகுள்ள விதைகளையும் கசப்பான பட்டையும் கொண்ட குறுஞ்செடு.விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- விராலி, காச்சல் தணித்தல், உடல்உரமாக்கல், வீக்கம் கட்டிகளைக் கரைத்தல் சதைநரம்புகளைச் சுருங்கச் செய்தல் ஆகிய பயன்களையுடையது.

20 கிராம் விராலி இலையை இடித்துக் கால் லிட்டர் நீரிலிட்டு ஒரு நாள் ஊறவைத்து வடிகட்டியதில்20 மில்லியைச் சிறிது பால் கலந்து சாப்பிட்டு வர நுரையீரல் நோய்கள், கணச்சூடு, இருமல், சளி ஆகியவை தீரும்.

விராலி இலையை வதக்கிக் கட்டிகள் மீது கனமாக வைத்துக்கட்டி வரக் கட்டி அமுங்கி விடும் அல்லது உடைந்து விரைவில் ஆறும். வீக்கம் கரையும்.

விராலிப் பட்டையை உலர்த்திப் பொடித்து ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து உண்டுவரச் சளி, சளிக்காச்சல், மூறைக்காச்சல், மலேரியா முதலிய
நோய்கள் தீரும்.விராலிப் பட்டையை அரைத்துப் பற்றிட வீக்கங்கள்
விரைவில் கரையும்.

நன்னாரி
பூனை மீசை மூலிகை மருத்துவ சிறப்புகள்!
                                                                             
பூனை மீசை இலைகளுடன் மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காயளவு எடுத்து காலை, மாலை சாப்பிட்டு வர சிறுநீரகம் சம்பந்தமான நோய்கள் தீரும்.
                                                                                                         
பூனை மீசை,  வாத நோய், நீரழிவு, இரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேக வெட்டை நோய், சிபிலிஸ்,  பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல்
இரத்த அழுத்தம், சிறுநீரக செயல் இழப்பு , கல்லீரல் புகார்கள், சிறுநீரக கோளாறுகள் போன்ற நோய்களுக்கான அற்புத மூலிகை.
                                                                             
பூனை மீசை மூலிகை சர்க்கரை நோய், இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டுவருகிறது. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியற்றுகிறது. சிறுநீரகத்தின் செயல் திறனை அதிகபடுத்துகிறது. சிறுநீரக குறைபாடு உள்ளவர்களின் உடலில் உள்ள தேவை இல்லாத உப்புகளை வெளியேற்றி டயாலிசிஸ் செய்வதை தவிர்க்க உதவுகிறது. கல்லீரல் கொழுப்பை கரைத்து அதன் திறனை அதிகபடுத்துகிறது. ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைக்கிறது.  உடல் எடையை குறைக்கிறது.
                                                                                           
சர்க்கரை நோய் , இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினமும்  காலை,மாலை வேளைகளில் இதன் சாறு அருந்துவதன் மூலம் கட்டுக்குள் கொண்டுவரலாம்.
                                                                               
1.1/2 தம்ளர் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு அந்த நீரில் 2 மேஜை கரண்டி அளவு மூலிகையை போட்டு (5கிராம் ), மூடி போட்டு மூடி வைக்க வேண்டும், பின் 20 நிமிடங்களுக்கு பிறகு வடிகட்டி குடிக்க வேண்டும் . சர்க்கரை நோய் இல்லாதவர்கள் தேவை என்றால் தேன், பனைவெல்லம் சேர்த்துகொள்ளலாம் .
                                                                                     
தினமும் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக அனைவரும் இந்த மூலிகை டீ அருந்தினால் நோய்களை தவிர்த்து ஆரோக்யமாக வாழலாம்..


மூலிகையன் பெயர் :- கல்லுருவி.
தாவரப்பெயர் :- AMMANNIA BACCIFERA.
தாவரக்குடும்பம் :- LYTHRACEAE.
பயன் தரும் பாகங்கள்சமூலம்.


வளரியல்பு :கல்லுருவி நல்லசீதோசன    நிலையில் எல்லாஇடங்களிலும் வளர்வதுஇதுசாதாரணமாக  இந்தியா முழுதும்சதுப்பு நிலங்களிலும் வளரும்பூண்டுவயல்களில் நெல்அறுவடைக்குப்பின் களையாகத்தென்படும் செடிஇதன் தாய்யகம்இந்தியாபின் ஆப்பிரிக்கா,ஆப்கானிஸ்தான்பாக்கீஸ்தான்,சைனாபிலிப்பனஸ் ,நியுஜினியாஆஸ்திரேலியா,மற்றும் மலேசியாவில் பரவிற்று.இதை ஆங்கிலத்தில் MONARCH RED STEM  என்பர் கல்லுருவி  ஒருஅடியிலிருந்து 2  அடி வரைவளரக்கூடியதுநேராக வளரும்.சிறு கிழைகள் அதிகாக இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில்அமைந்திருக்கும்இலைகள்மென்மையானவை நீளம் சுமார் 3.5செ.மீஇருக்கும்தண்டு சதுரவடிவில் அமைந்திருக்கும்இலை இடுக்குகளில் பூக்கள்பூத்திருக்கும்அதன் இதழ்கள்சுமார் 1.2 மி.மீநீழம் பச்சைஅல்லது கத்தரிப்பூ நிறத்தில்இருக்கும்சூலகம் வட்ட வடிவில்இருக்கம்இது  தன் மகரந்தச்சேர்க்கையால் காய் உண்டாகும்.விதைகள் கருப்பாக  இருக்கும். கல்லுருவி இனம் போன்றுதொடர்புடைய வேறு செடிகளின்பெயர்கள்- AMMANNIA BACCIFERA L.FORMA BACCIFERA, AMMANNIA BACCIFERA KOEHNE FORMA TYPICA, AND AMMANNIA BACCIFERA L.SUBSP.BACCIFERA.. இது போன்றுஎண்ணற்ற இனங்கள் உள்ளன.கல்லுருவி விதைகள் மூலம் இனவிருத்தி செய்யப்படுகிறது.

மருத்துவப்பயன்கள் :- கல்லுருவிஇலைகள் புண்களைப் போக்கவல்லதுவிழத்தைக்குணப்படுத்தும்காச்சலைப்போக்கும்புற்றுநோயால் அழியும்செல்களைப் புதிப்பிற்கும்தன்மையுடையதுமேலும் இதுபற்றி பல ஆராய்ச்சிகள் மேல்நாட்டில் செய்துகொண்டுள்ளார்கள்இதன்மூலிகை இனம்  காண்பதில் சிலசிக்கல்கள் உள்ளதாகச் சொல்வர்.

கல்லுருவிப் பூண்டுபலகட்டிகளையுங் கரைக்கும்
வல்லுதிரக் கட்டருக்கும்வந்தபுண்ணை வெல்லரிய
மேகத் தைவல் விடத்தை நீறாதகற்றிடும்
லோகத்தைச் சுத்தி செய்யும்போது

கல்லுருவி மூலிகை இலையைஅரைத்து தோலில் தடவகொப்பளிக்கும் கட்டி உடையும்கடிநஞ்சுகளுக்கு இதன் இலையைக்கசக்கி கடிவாயில் வைத்துக்  கட்ட நஞ்சு  முறியும்தேள் கடிவிடத்தையும் முறிக்கும்இரத்தத்துடிப்பகற்றும்.
இலைச்சாற்றை வண்டு கடிக்குப்பூசினால் குணமடையும்இதன்இலைகளில் சி வைட்டமீன்உள்ளது.இதன் இலைச்சாற்றை உடல் மீதுதடவினால் தோல் வியாதிகுணமடையும்காச்சலும்குணமடையும்.ரணமான புண்களைக்குணப்படுத்த இதன் சமூலத்தைஅரைத்து  வைத்துக் கட்டகுணமடையும்.
உண்ணும் உணவுடன்இலைச்சாறு கலந்து விட்டால்அடிவயிற்றில் எரிச்சல் ஏற்படும்கவனத்துடன் கையாள வேண்டும்.
எட்டிமரம்
தாவரப்பெயர் -: STRYCHNOS NUX VOMICA.
தாவரக்குடும்பம் -: LOGANIACEAE.
#வளரியல்பு -:எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர்கூடியது.
இதன் இலை பச்சையாக 2 அங்குல அகலத்தில் 5 - 9 செ.மீ. நீளம் வரை இருக்கும். தன் தாயகம் தென் கிழக்கு ஆசியா. தென் அமரிக்கா, மற்றும் பர்மா, சைனா, கிழக்கிந்தியா, தாய்லாண்டு, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலெசியா(மலேயா) இந்தியா போன்ற நடுகளில் பரவலாக உள்ளது.
இலை வேர் காம்பு,பட்டை வித்தன்மை உடையது. உயிரையும் கொல்லும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும். இது விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
நக்சுவாமிகாவின் செயல்பாடுகளுக்கு அடிப்படையாக இருப்பவை மூன்று ஆல்கலாய்டுகள்: சிட்ரக்னைன், புருனைன், வாமிசைன். இவற்றுள் முதல் ஆல்கலாய்டுதான் பெரும் பங்கு வகிக்கிறது.

இதன் பொதுவான குணம். வெப்பத்தை உண்டாக்கும். வாய்வை அகற்றும், மலத்தை உண்டாக்கும், சிறு நீரைப் பெருக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, குடல் எரிச்சல், இருதயவயாதி, இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணரல் போன்றவற்றைக் குணப் படுத்தும்.


Tamil - Kovai

English - Ivy gourd

Telugu - Donda keya

Malayalam - Kovvai

Sanskrit - Bimbi

Botanical Name - Coccinia grandis

இதன் பழங்கள் இனிப்பு, புளிப்பு, கசப்பு தன்மை கொண்டது. கோவையின் நிறத்தையும், வடிவத்தையும் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாமக்கோவை, கருங்கோவை என பலவகையாகப் பிரிக்கின்றனர். இதன் இலை, காய், வற்றல், தண்டு, கிழங்கு அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. இதனை தொண்டைக்கொடி என அழைக்கின்றனர். மேலும் அப்பைக் கோவை, ராமக் கோவை என இருவகைகள் உள்ளன.கண்ணுங் குளிர்ச்சிபெறுங் காசமொடு வாயுவறும்,புண்ணுஞ் சிரங்கும் புரண்டேகும்-நண்ணுடலும்மீதிலார் வெப்பகலும் வீழாநீர்க் கட்டேருங்கோதிலாக் கோவையிலைக்கு(அகத்தியர் குணபாடம்)கண் நோய் குணமாககண்கள் ஐம்புலன்களில் முதன்மையானது. கண்களால்தான் புறத்தோற்றங்களை காணவும் ரசிக்கவும் முடியும். உடலில் எந்தவகையான பாதிப்பு ஏற்பட்டாலும் கண்கள் முதலில் பாதிக்கப்படும்.  கண் நரம்புகள் பாதிக்கப்படுகின்றன.இதற்கு கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடியாக்கி, கஷாயம் செய்து தினமும் காலையில் அருந்தி வந்தால் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும் கண் நரம்புகள் பலப்படும்.

தோல் கிருமிகள் நீங்கதோலில் ஏற்படும் சொறி, சிரங்கு இவற்றைக் குணப்படுத்தவும், தோலில் ஏற்படும் அலர்ஜியைத் தடுக்கவும் கோவை இலை பயன்படுகிறது.கோவை இலை, மஞ்சள் தூள், சிறியா நங்கை, வேப்பிலை இவைகளை சம அளவு எடுத்து ஒன்றாக சேர்த்து அரைத்து சிறிது நீர் கலந்து மண்சட்டியில் விட்டு நன்றாக காய்ச்சி ஆறியபின் உடலெங்கும் பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் சொறி சிரங்கு குணமாகும். இரத்தம் சுத்தமடையகாற்று, நீர், இவற்றின் மாசடைந்த தன்மையாலும் இன்றைய அவசர உணவு (பாஸ்ட்புட்)களாலும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைப்பதில்லை. இதனால் இரத்தத்தில் இரும்புச் சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் பித்த அதிகரிப்பு காரணமாக இரத்தம் அசுத்தமடைகிறது. இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. இரத்த சோகை மற்றும் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் உருவாகிறது.இவர்கள் கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் 1 ஸ்பூன் அளவு தேனில் கலந்தோ அல்லது கஷாயமாகக் காய்ச்சியோ அருந்தி வந்தால் இரத்தம் சுத்தமடைவதுடன் உடலும் புத்துணர்வு பெறும்.உடல் சூடு சமநிலையிலிருக்கதற்போது கோடைக் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை பெய்துள்ளது. இதனால் சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களால் உடலின் தட்ப வெப்ப நிலையும் மாறுபடுகிறது. இதனால் உடலுக்கு பல பாதிப்புகள் உருவாகிறது. இதற்கு கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சிபெறும் .வியர்க்குரு ஏற்படாமல் தடுக்க.சிலருக்கு வியர்வை வெளியேறாமல் வியர்க்குருகளாக நீர்கோர்த்துக்கொள்ளும். இவை சில சமயங்களில் வேனல் கட்டிகளாக மாறவும் வாய்ப்புள்ளது. இவர்கள் கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.தாது புஷ்டியாகமன அழுத்த பிரச்சனையால் சிலர் தாதுவை இழந்துவிடுகின்றனர். இதனால் இவர்கள் மண வாழ்க்கைக்கு செல்ல பயங்கொள்கின்றனர். மேலும் சிலரோ இதை மறைத்து திருமணம் செய்து பின்னாளில் மணவாழ்க்கை கசந்து விவாகரத்து கோரி நிற்கின்றனர். இப்பிரச்சனை தீர கோவையிலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டுவந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். இவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமாகும்.கோவை இலையின் சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும்